பல ஆண்டுகால கோரிக்கை... நிறைவேற்றிய இண்டிகோ - நெகிழ்ச்சியில் கோவை மக்கள்!

Coimbatore Abu Dhabi Flight
By Vidhya Senthil Aug 10, 2024 05:40 AM GMT
Report

 கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று காலை தொடங்கியது.

விமான சேவை

திருச்சி மற்றும் அபுதாபி இடையே தொடங்கப்படவுள்ள நேரடி விமான சேவையை தொடர்ந்து, கோவை மற்றும் அபுதாபி இடையே நேரடி விமான சேவை ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகால கோரிக்கை... நிறைவேற்றிய இண்டிகோ - நெகிழ்ச்சியில் கோவை மக்கள்! | Coimbatore Abu Dhabi Direct Flight Service Star

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு மட்டுமே வாரத்தில் ஐந்து நாட்களுக்கு நேரடி விமானம் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கோவை - அபுதாபி இடையே நேரடி விமான சேவையை தொடங்க பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் தரப்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

கடுப்பேற்றிய விமான ஊழியர் - கொந்தளித்த பூஜா ஹெக்டே!

கடுப்பேற்றிய விமான ஊழியர் - கொந்தளித்த பூஜா ஹெக்டே!

இண்டிகோ

இதனை ஏற்று கோவை மற்றும் அபுதாபி இடையே வரும் (ஆகஸ்ட் 10ஆம் தேதி) இன்று முதல் இந்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இன்று அபுதாபியில் இருந்து அதிகாலை 6.40 மணிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் காலை 6:25 மணிக்கு கோவை விமான நிலையத்தை சென்றடையும்.

பல ஆண்டுகால கோரிக்கை... நிறைவேற்றிய இண்டிகோ - நெகிழ்ச்சியில் கோவை மக்கள்! | Coimbatore Abu Dhabi Direct Flight Service Star

அதேபோல மறுமார்க்கமாக மீண்டும் கோவையில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணியளவில் அபுதாபி வந்தடையும். மொத்தம் 186 பேர் பயணிக்க கூடிய ஏ 320 ரக விமானம் இந்த சேவைக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.