ரூட் மாறும் சென்னை மெட்ரோ - புதிதாக இணைக்கப்படும் பகுதி

Chennai Railways
By Karthikraja Jan 23, 2025 12:30 PM GMT
Report

சென்னை மெட்ரோவை பட்டாம்பிரம் வரை நீடிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ

விரைவான பயணம் காரணமாக சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது. சென்னை மெட்ரோ தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது வரை 35.53 கோடி பேர் பயணித்துள்ளனர். இதில் கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 10 கோடி பேர் பயணித்துள்ளனர். 

chennai metro route map

சென்னை மெட்ரோ சேவையானது, சென்னை விமான நிலையம் தொடங்கி கோயம்பேடு வழியாக சென்ட்ரல் ரயில் நிலையம் வரை ஒரு வழித்தடமும், பரங்கிமலை தொடங்கி கிண்டி வழியாக விம்கோ நகர் வரை மற்றொரு வழித்தடமும் இயக்கப்படுகிறது. 

இனி சென்னையில் ஏசி லோக்கல் ரயில் - எப்போது முதல் தெரியுமா?

இனி சென்னையில் ஏசி லோக்கல் ரயில் - எப்போது முதல் தெரியுமா?

பட்டாபிராம் வரை நீட்டிப்பு

தற்போது கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ வழித்தடத்தை நீட்டிக்க திட்டமிடபட்டிருந்தது. இதற்கான தூரம் 16.1கி.மீ ஆகும். இந்நிலையில் இன்னும் 4 கிமீ தூரத்தை அதிகரித்து பட்டாபிராம் வரை மெட்ரோ திட்டத்தை நீட்டிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

chennai metro route map

பட்டாபிராம் பகுதியில் ஐடி நிறுவனங்கள் வளர்ந்து வருவதோடு, அங்கு கல்வி மற்றும் வேலைக்காக நாள்தோறும் 10,000 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இதற்கான விரிவான திட்ட அறிக்கை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, கலங்கரை விளக்கம் தொடங்கி பூவிருந்தவல்லி புறவழிச்சாலை வரை, சிறுசேரி சிப்காட் தொடங்கி மாதவரம் வரை, சோழிங்கநல்லூர் தொடங்கி மாதவரம் என 3 புதிய வழித்தடத்தில் 118.9 கிலோமீட்டர் நீளத்தில் 128 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 2027 ஆம் ஆண்டு இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.63,246 கோடியாகும்.