சென்னையில் 105 ஏக்கரில் வரவுள்ள விளையாட்டு நகரம் - எங்கு தெரியுமா?
சென்னையில் அமைய உள்ள விளையாட்டு நகரத்துக்கான டெண்டர் கோரியுள்ளது சிஎம்டிஎ.
ஸ்போர்ட் சிட்டி
சென்னையில் உலக தரத்திலான மெகா ஸ்போர்ட் சிட்டி எனும் விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 ம் ஆண்டு சட்ட மன்றத்தில் அறிவித்து இருந்தார். இந்த விளையாட்டு நகரத்தை அமைக்க தகுந்த இடத்திற்கான ஆய்வுகள் நடந்தது.
அதில் செம்மஞ்சேரி, வண்டலூர், குண்டம்பாக்கம் உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்த விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டது.
வட சென்னையில் குத்துச்சண்டை மைதானம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் : முதலமைச்சரின் சூப்பர் அறிவிப்பு
டெண்டர்
அதன் பின் செம்மேஞ்சேரியை தேர்வு செய்து அங்கு விளையாட்டு நகரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது இதற்கான தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது.
இந்த விளையாட்டு நகரத்தில் டேபிள் டென்னிஸ் அரங்கம், வாலிபால் மைதானம், ஜிம்னாஸ்டிக் பயிற்சி கூடங்கள், ஹாக்கி மைதானம், நீச்சல் குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் வீரர்கள் தங்கும் அறைகள், பணியாளர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியையும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.