வட சென்னையில் குத்துச்சண்டை மைதானம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் : முதலமைச்சரின் சூப்பர் அறிவிப்பு

M. K. Stalin DMK
By Irumporai Apr 21, 2022 06:44 AM GMT
Report

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின்:

அறிவு சொத்து போல் உடல் வலிமையும் ஒரு சொத்து என கூறினார். மேலும், விளையாட்டு உடலை துடிப்புடன் வைத்துள்ளதாக கூறிய முதலமைச்சர்.தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுவர்.அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் உருவக்கப்பட உள்ளதாக கூறினார்.

வட சென்னையில் குத்துச்சண்டை மைதானம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் : முதலமைச்சரின் சூப்பர் அறிவிப்பு | Jallikattu Stadium Bulid In Madurai Says Mk

ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டத்தின் படி  ரூ.25 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், சென்னை அருகே மெகா விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு சென்னை ஓபன் டென்னிஸ் தொடரை மீண்டும் நடத்தவும்  பீச் வாலிபால் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

இந்த நிலையில் ,புதிய முதலீடுகளும் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். மதுரை, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென பிராமாண்ட மைதானம் அமைக்கப்படும். வட சென்னையில் 10 கோடி ரூபாய் செலவில் குத்துச் சண்டை மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.