இன்னும் நல்ல நேரம் வரவில்லையா முதலமைச்சரே? வானதி சீனிவாசன் ஆவேசம்

Chief Minister of Tamil Nadu C Joseph Vijay
By Manchu Jun 04, 2026 05:30 PM GMT
Report

முதல்வர் விஜய் அறிமுகப்படுத்த இருக்கும் சிங்கப்பெண் அதிரடிப்படை குறித்து பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிங்கப்பெண் அதிரடிப்படை

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சமீபத்தில் சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமை ஒட்டுமொத்த மக்களையும் கொந்தளிக்க வைத்தது.

இவை அடங்கும் முன்பு தற்போது திருச்சியில் 14வயது சிறுமி வாடகை கார் ஓட்டுனரால் மது ஊற்றிக்கொடுத்து வன்கொடுமை செய்யப்பட்டது அதிர வைத்துள்ளது.

இன்னும் நல்ல நேரம் வரவில்லையா முதலமைச்சரே? வானதி சீனிவாசன் ஆவேசம் | Cm Vijay Launch Singappen Scheme Ask Vanathi

இவ்வாறு அடுத்தடுத்து பெண்களுக்கு வன்கொடுமை நடந்துவரும் நிலையில், முதல்வர் விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் சிங்கப்பெண் அதிரடிபடை குறித்து கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது கேள்வி மேல் கேள்வி எழுந்து வருகின்றது.

தமிழ்நாட்டில் 7000 பெட்ரோல் பங்க் மூடப்படும் நிலை... காரணம் என்ன?

தமிழ்நாட்டில் 7000 பெட்ரோல் பங்க் மூடப்படும் நிலை... காரணம் என்ன?

வானதி சீனிவாசன் ஆவேசம்

இந்நிலையில் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், பெண்கள் வன்கொடுமை அதிகரித்து வரும் நிலையில், எத்தனை நாளுக்கு தான் இவ்வாறு கயவர்கள் பிடியில் சிக்கி சீரழிவது? முதலமைச்சர் அவர்களே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடை ஆரம்பிக்க இன்னுமா நல்ல நேரம் வரவில்லை.

இன்னும் நல்ல நேரம் வரவில்லையா முதலமைச்சரே? வானதி சீனிவாசன் ஆவேசம் | Cm Vijay Launch Singappen Scheme Ask Vanathi

பெண்களின் பாதுகாப்பிற்காக உங்களது திட்டத்தினை உடனடியாக தொடங்கியிருக்க வேண்டாமா? காலம் தாழ்த்தி செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் அதற்குரிய பலனை தராது என்பதை முதல்வர் விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே விரைவில் சிங்கப்பெண் திட்டத்தினை உடனே செயல்படுத்தி பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.