தவெக அமைச்சரவையில் இணைய காங்கிரஸுக்கு அழைப்பு - எத்தனை அமைச்சர்கள்?

Vijay Indian National Congress Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja May 14, 2026 01:35 PM GMT
Report

தவெக அமைச்சரவையில் இணைய காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக க்ரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். 

தவெக அமைச்சரவையில் இணைய காங்கிரஸுக்கு அழைப்பு - எத்தனை அமைச்சர்கள்? | Cm Vijay Invited Congress To Join Ministry

தவெக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், முதல் கட்சியாக 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெக கூட்டணியில் இணைந்தது.

அதைத்தொடர்ந்து, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளன. 

மாசம் ரூ 2500 தரேன்னீங்க! இப்ப ரூ 1000 தர முடியலையா? - ஸ்டாலின் கேள்வி

மாசம் ரூ 2500 தரேன்னீங்க! இப்ப ரூ 1000 தர முடியலையா? - ஸ்டாலின் கேள்வி

முதல்வர் விஜய் உடன் 9 அமைச்சர்கள் பதவியேற்று அவர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், விரைவில் இலாகா ஒதுக்கப்பட்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என தகவல் வெளியானது.  

இந்நிலையில், தவெக அமைச்சரவையில் இணைய காங்கிரஸுக்கு அழைப்பு வந்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் க்ரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். 

தவெக அமைச்சரவையில் இணைய காங்கிரஸுக்கு அழைப்பு - எத்தனை அமைச்சர்கள்? | Cm Vijay Invited Congress To Join Ministry

மேலும், எத்தனை அமைச்சர்கள் என்பது பற்றிஆலோசனை நடத்தி வருகிறோம், முதலமைச்சர் விஜய் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இன்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தனர். 

தவெக அமைச்சரவையில் இணைய காங்கிரஸுக்கு அழைப்பு - எத்தனை அமைச்சர்கள்? | Cm Vijay Invited Congress To Join Ministry

காங்கிரஸ் தரப்பில் 2 அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்வரும் உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக கூட்டணி தொடரும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.