மாசம் ரூ 2500 தரேன்னீங்க! இப்ப ரூ 1000 தர முடியலையா? - ஸ்டாலின் கேள்வி
மாதம் ரூ 2500 தருவதாக கூறிவிட்டு, ரூ 1000 கூட தராம இழுத்தடிப்பதுதான் உங்கள் மாற்றமா என முதல்வர் விஜய்யிடம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தேர்தலுக்கு முன்பே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதத்திற்கான தலா ரூ 1000 வீதம் ரூ 3000, கோடை கால சிறப்பு நிதி என்ற பெயரில் ரூ 2000 என ரூ 5000 பிப்ரவரி மாதத்திலேயே முந்தைய திமுக அரசு வழங்கியது.

இந்த நிதியை ரூ 2000 ஆக உயர்த்துவதாக திமுக அரசு அறிவித்திருந்தது. அது போல் அதிமுகவும் ரூ 2000 தருவதாக தெரிவித்திருந்தது. மேலும் தவெக விஜய் இந்த உரிமைத் தொகை ரூ 2500 ஆக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மே 2026 மாதத்திற்கான ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என முதல்வர் விஜய் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இதை மேற்கோள்காட்டி முன்னாள் முதல்வர் ஸ்டாலின், விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிடுகையில்,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
DMK President MK Stalin tweets, "The Kalaignar Women’s Rights Assistance amount for the month of May must be credited on the 15th. Why is there a delay now in continuing an already existing scheme? What “restructuring” are you planning to do? Only yesterday in the Legislative… pic.twitter.com/qWnRtn3SNo
— ANI (@ANI) May 14, 2026
இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி IBC Tamil