அப்பா படித்த பள்ளியில் காலை உணவு திட்டம்; என்னை தெரியுமா? குழந்தைகளுடன் உரையாடிய முதலமைச்சர்!
அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
காலை உணவு
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. முதலில் மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்திருந்தார்.
இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விரிவாக்கம்
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள 31,00 அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தும் பணி தீவிரமானது.
மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதற்காக 404 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 25 பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். அதன் சுவை குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
சென்னை திருவல்லிகேணி பள்ளியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பல பகுதிகளில் அமைச்சர்கள் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளனர்.