தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவுரை

M K Stalin
By Irumporai Jul 09, 2022 06:17 AM GMT
Report

உலகம் முழுவதும் நாளை(ஜூலை 10) தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

பக்ரீத் வாழ்த்துக்கள்

மேலும்,கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் முதல்வர் கூறியுள்ளதாவது:

‘அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவுரை | Cm Stalins Important Advice To Muslims Acros

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும் பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும் கொரோனா பரவலைக் கவனத்தில் கொண்டு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து,தியாகப் பெருநாளைப் பாதுகாப்புடன் கொண்டாடிட வேண்டும் எனக் கேட்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்க வேண்டும் - பிரதமர் மோடியைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை