முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சியில் வாக்குசேகரிப்பு - வீதி வீதியாக சென்று மக்களை சந்திப்பு!
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
முதல்வர் ஸ்டாலின்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வாக்குசேகரிக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், திமுக சார்பில் திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின். அதில், திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார்.
மக்களை சந்திப்பு இதை தொடர்ந்து, கொரடாச்சேரியில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ள மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார்.
மக்களை சந்திப்பு
இதற்காக அவரை திருச்சியில் இருந்து நேற்று இரவு தஞ்சை வந்து தனியார் விடுதியில் தங்கினார். இதனையடுத்து, இன்று காலை மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, காமராஜர் மார்க்கெட்டில் மக்களையம், ஸ்டேடியத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்களிடமும் சென்று வாக்குசேகரித்தார்.
பின்னர், கீழராஜ வீதியில் சென்று அங்குள்ள தேநீர் கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.அவருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, எம்.பி பழனிமாணிக்கம் ஆகியோரும் உடன் இருந்தனர்.
மேலும், நடைப்பயிற்சி மேற்கொண்டு வீதி வீதியாக சென்ற முதல்வரை கண்டதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்தக்கொண்டனர்.