கைலி கட்டி அரசாங்கத்தையே நடத்துவோம் - வைரலாகும் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம்

M K Stalin Tamil nadu DMK Viral Photos
By Sumathi Jul 23, 2025 01:12 PM GMT
Report

முதல்வர் ஸ்டாலின் லுங்கி அணிந்தபடி பணியாற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

சிகிச்சையில் ஸ்டாலின்

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மூன்று நாட்களாக தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். அங்கிருந்தே மக்கள் நலத் திட்ட பணிகளை செய்து வருகிறார்.

mk stalin in apollo hospital

அந்த வகையில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், முதல்வரின் தனிச் செயலாளர் உமாநாத் உள்ளிட்ட அதிகாரிகளோடு மருத்துவமனையில் அமர்ந்தபடி காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு)

மீண்டும் திமுகதான்.. மேலே வந்த விஜயின் தவெக - அப்போ அதிமுகவின் நிலை? (தேர்தல் கருத்து கணிப்பு)

வைரல் புகைப்படம் 

அப்போது கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மக்களுடன் நேரடியாக உரையாடினார். முதல்வரின் புகைப்படத்தில் கைலி, கட்டம் போட்ட சட்டை, தோளில் துண்டுடன் உள்ளார்.

கைலி கட்டி அரசாங்கத்தையே நடத்துவோம் - வைரலாகும் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படம் | Cm Stalin Works From Hospital Lungi Post Viral

இந்நிலையில் இந்த புகைப்படத்தை பதிவிட்டு எழுத்தாளர் மதிமாறன், ”ஆரியத்திற்கு லுங்கி மீது எப்போதுமே தீண்டாமை. அதை அணிபவர்கள் மீதும் வெறுப்பு.

ஆனால், ஓய்வு நேரத்தில் வீட்டில் மட்டுமல்ல, மருத்துவமனையிலேயே லுங்கி கட்டி தான் அரசாங்கத்தையே நடத்துவோம். பெரியார்+கலைஞர்+தளபதி = திராவிட லுங்கி💕" எனக் குறிப்பிட்டுள்ளார்.