அதிமுக ஆட்சியின் வளர்ச்சியை விட இருமடங்கு மிஞ்சினோம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தனிநபர் வருமானத்தில் அதிமுக ஆட்சியின் வளர்ச்சியை விட இருமடங்கு மிஞ்சினோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தனிநபர் வருமானம்
இந்தியாவின் தனிநபர் வருமான விவரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அந்த பதிலில், தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது. ரூ.2,04,605 தனிநபர் வருமானத்துடன் கர்நாடக முதலிடத்திலும், ரூ.1,96,309 தனிநபர் வருமானத்துடன் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது என கூறப்பட்டது.
முதல்வர் பெருமிதம்
இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஆட்சியின் இறுதியாண்டான 2020-21-ல் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் 1.43 இலட்சம் ரூபாய் மட்டுமே.
நம் கழக ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் சராசரியாக 8.15 சதவீதம் வளர்ச்சியோடு 2024-25 ஆம் ஆண்டில் தனி நபர் வருமானம் 1.96 இலட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
"எல்லார்க்கும் எல்லாம்" என்ற உன்னத கொள்கையோடு செயல்பட்டு வரும் நமது திராவிட மாடல் ஆட்சிக்குக் கிடைத்த அடுத்த மணிமகுடம் தான் இது" என குறிப்பிட்டிருந்தார்.
தேசிய சராசரியை விஞ்சினோம்!
— M.K.Stalin (@mkstalin) July 23, 2025
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்! https://t.co/A5l9xs22X5
அதை பகிர்ந்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!" என குறிப்பிட்டுள்ளார்.