மாதம் ரூ.1000; புதுமைப் பெண் திட்டம் - 2ம் கட்டமாக முதலமைச்சர் தொடக்கம்!
புதுமைப் பெண் திட்டத்தின் 2ம் கட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
புதுமைப் பெண்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த நிகழ்வில்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப சூழல், வறுமை காரணமாக படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், குழந்தை திருமணத்திஅ தடுத்தல்,
ஸ்டாலின் தொடக்கம்
பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய இது வழிவகை செய்யும் என அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இத்திட்டத்தால் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இடைநின்ற 12,000 மாணவிகள் மீண்டும் உயர்கல்வி பயில்வதாக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் பட்டாபிராமில் உள்ள இந்து கல்லூரியில், புதுமைப் பெண் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் 1,04,347 மாணவிகள் பயன்பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.