மில்லியன் கணக்கான இந்திய மக்களுக்கு உத்வேகம் - வினேஷ் போகத் குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!
சில கிராமுக்கு மேல் தகுதியிழப்பு உங்கள் மனதையும் சாதனைகளையும் குறைக்க முடியாது என வினேஷ் போகத்திற்கு தமிழக முதலவர் ஆறுதல் கூறியுள்ளார்.
வினேஷ் போகத்
பிரான்சில் நடைபெற்று வரும் பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு காலிறுதியில் முன்னேறி வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து இன்று இரவு தங்கப் பதக்கத்திற்கான இறுதி போட்டி விளையாட இருந்தது .
ஆனால் வினேஷ் போகத் 50 கிலோ எடைப் பிரிவில் குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகம் இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.இதனால் அவர் தங்கம் பெரும் வாய்ப்பை இழந்தார்.
முதலவர் ஆறுதல்
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ,'' வினேஷ், நீங்கள் 'ஒவ்வொரு வகையிலும்' உண்மையான சாம்பியன். உங்கள் பின்னடைவு, வலிமை மற்றும் இறுதிப் போட்டிக்கான குறிப்பிடத்தக்க பயணம் மில்லியன் கணக்கான இந்திய மகள்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
Vinesh, you are a true champion in 'every' sense. Your resilience, strength, and remarkable journey to the finals have inspired millions of Indian daughters.
— M.K.Stalin (@mkstalin) August 7, 2024
Disqualification over a few grams cannot diminish your spirit and achievements. Though you missed a medal, you have won… pic.twitter.com/yzuvP6RDkA
சில கிராமுக்கு மேல் தகுதியிழப்பு உங்கள் மனதையும் சாதனைகளையும் குறைக்க முடியாது. நீங்கள் ஒரு பதக்கத்தைத் தவறவிட்டாலும், உங்கள் அபாரமான உறுதியால் அனைவரின் மனதையும் வென்றுள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.