தமிழ்ப் புதல்வன் திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

M K Stalin Tamil nadu Coimbatore DMK
By Swetha Aug 09, 2024 03:02 AM GMT
Report

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 

அரசுப் பள்ளிகளில் படித்து உயர்க்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ இன்று முதல் அமலாகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும்

தமிழ்ப் புதல்வன் திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்! | Cm Stalin To Start Thamizh Pudhalvan Today

‘புதுமைப்பெண் திட்டம்’ தொடங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் வழியாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

முன்னதாக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் இதுவரை 3 லட்சத்து 28 ஆயிரத்து 250 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.இந்த நிலையில், தற்போது அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் ‘தமிழ் புதல்வன்’ என்கிற திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

தமிழ்நாடு பட்ஜெட் - மாணவர்களுக்கும் ஜாக்பாட் - மாதம் ரூ.1000 - புதிய திட்டம் அறிமுகம்

தமிழ்நாடு பட்ஜெட் - மாணவர்களுக்கும் ஜாக்பாட் - மாதம் ரூ.1000 - புதிய திட்டம் அறிமுகம்

தமிழ்ப் புதல்வன்

இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கி கணக்கில் மாதம் 1000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்ப் புதல்வன் திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்! | Cm Stalin To Start Thamizh Pudhalvan Today

இந்த தமிழ் புதல்வன் திட்டத்தை கோவை அரசு கல்லூரியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்து 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று

கல்லூரிகளில் சேரும் 3 லட்சத்து 28 ஆயிரம் மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை பெறுவார்கள். இதற்காக ரூ. 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.