தமிழ்நாடு பட்ஜெட் - மாணவர்களுக்கும் ஜாக்பாட் - மாதம் ரூ.1000 - புதிய திட்டம் அறிமுகம்
இந்த வருடம் தமிழ்நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்துள்ளார்.
நிதிநிலை பட்ஜெட்
தமிழ்நாட்டிற்கான இந்த வருட பட்ஜெட்டில் உயர் கல்வித் துறைக்கு ரூ.8.212 கோடி நிதி ஒதுக்கீடு. தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும். ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2500 கோடி ஒதுக்கீடு.
கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய ஐடி பூங்கா. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அதிகரிக்கப்படும் போன்ற அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கோவை மாவட்டத்தில் பிரம்மாண்ட நூலகம் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
நாமக்கலில் ரூ.358 கோடி, திண்டுக்கல்லில் ரூ.565 கோடி, பெரம்பலூரில் ரூ.366 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்ப் புதல்வன் திட்டம்
இதில் மற்றுமொரு புதிய அறிவிப்பாக தமிழ்நாட்டின் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் புதல்வன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்களை சாதனையாளர்களாக மற்ற இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.