பிரதமர் உடனான சந்திப்பு - நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்!
நாளை மறுநாள் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்குத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகக் கடந்த மாதம் 27-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றார்.
அங்கு சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ நகர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
17 நாட்கள் அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 14-ந்தேதி அவர் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மெட்ரே ரயில் நிதி, பள்ளிக்கல்வித்துறை நிதி விவகாரம் தொடர்பாகப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்" என்று கூறினார்.
சந்திப்பு
இந்த நிலையில் நாளை மறுநாள் பிரதமர் மோடியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி தரப்பிலிருந்து இதுவரை நேரம் வழங்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நேரம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாளை மறுநாள் (செப். 20) பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.