நாடாளுமன்ற தேர்தல்; களமிறங்குகிறார் முதலமைச்சர் - இன்று முதல் தீவிர பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று முதல் தீவிர பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
நாடாளுமன்ற தேர்தல்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் மிக விரைவில் 7 கட்டங்களாக நடக்கிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்துவிட்டு வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. முன்னதாக, வரும் தேர்தலில் போட்டியிட தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் தனது சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் முதல்வர் தொடங்குகிறார்.
திருச்சி மாவட்டம், சிறுகனூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
தீவிர பிரசாரம்
அதில் பங்கேற்கும் மு.க ஸ்டாலின் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு, திருச்சி தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
பொதுக்கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் தங்குவதற்கு திருச்சி அல்லது தஞ்சாவூரில் ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, திருவாரூர் செல்லும் முதல்வர், கொரடாச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தஞ்சாவூர், நாகை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
பின்னர்,அங்கிருந்த கிளம்பி திருச்சி வரும் வரும் முதல்வர், விமானம் மூலம் சென்னை வருகிறார்.
இது குறித்து முதல்மைஹச்ர மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மலைக்கோட்டை மாநகரில் எனது பரப்புரையைத் தொடங்குகிறேன். டெல்லி செங்கோட்டையை இண்டியா கூட்டணி பிடிப்பதில், இது நிறைவடைய வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.