சின்ன ஊக்கம் போதும், தமிழக மாணவர்கள் அடிச்சு தூள் கிளப்புவாங்க - முதலமைச்சர் ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
பாராட்டு விழா
சென்னையில் முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அதில் அவர் கூறுகையில், "கல்வி என்பது ஒரு காலத்தில் எட்டாகணியாக இருந்தது ஆனால் சமூகநீதி பார்வை கொண்ட தலைவர்களால் நீதிகட்சி காலத்திலிருந்து செயல்பட்டதுதான் இன்று கல்வி அனைவருக்கும் கிடைக்க காரணம். சின்ன ஊக்கமும் வழிகாட்டலும் இருந்தால் தமிழக மாணவர்கள் அடித்து தூள் கிளப்பி விடுவீர்கள்" என்று கூறினார்.
அரசு பள்ளி மாணவர்கள்
இதனை தொடர்ந்து, அவர் பேசுகையில், "நாட்டின் உயர்கல்வி நிலையங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை குறைவு, இந்நிலைமை மாறவேண்டும். கடந்த ஆண்டு முதன்மை உயர்கல்வி நிலையங்களுக்கு சென்ற மாணவர்கள் 75பேர்இந்த ஆண்டு 225 பேர் செல்கின்றனர்.
ஐஐடிக்கு கடந்த ஆண்டு 1 மாணவர் சென்றார். இந்த ஆண்டு 6 பேர் சென்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும்தான் முதன்மை உயர்கல்வி நிலையங்களுக்கு செல்ல முடியும் என்பதை அரசு பள்ளி மாணவர்கள் மாற்றியுள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களுக்கு செல்லும் போதுதான் சமூகநீதி நிலைநாட்டப்படும்" என்று தெரிவித்துள்ளார்.