பொய் சொல்வதில் பாஜகவினர் Whatsapp யூனிவர்சிட்டிகள் - முதலமைச்சர் விமர்சனம்..!

M K Stalin Smt Nirmala Sitharaman DMK BJP K. Annamalai
By Karthick Jan 22, 2024 12:58 PM GMT
Report

தமிழ்நாட்டில் பாஜகவினர் கடந்த 2 நாட்களாக ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒளிபரப்ப ஆளும் திமுக அரசு தடை விதித்ததாக குற்றம்சாட்டி வந்தனர்.

முதலமைச்சர் கண்டனம்

இதற்கு இன்று பதிலடி கொடுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெற்கில் போல இந்தியாவிற்கும் விடியல் பிறக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தெற்கில் போல இந்தியாவிற்கும் விடியல் பிறக்கும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவினர் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டபோதே உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கையை இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார் என குறிப்பிட்டார்.

cm-stalin-slams-annamalai-and-nirmala-seetharaman

தொடர்ந்து, ஒரு வதந்தியை வாட்ஸ்அப், இதர சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச் செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பா.ஜ.க.வில் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது என்று குற்றம்சாட்டினார்

யுனிவர்சிட்டி 

இதில் தலைநகரம் டெல்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பா.ஜ.க.வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது என சுட்டிக்காட்டிய தமிழ்நாடு முதலமைச்சர், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோயிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்புக்கு அறநிலையத்துறை தடை விதித்திருப்பதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதை சுட்டிக்காட்டி,

உயர் பதவியில் இருப்பவர் பொய் செய்தியை பரப்புவது வருத்தத்துக்குரியது- சேகர் பாபு..!

உயர் பதவியில் இருப்பவர் பொய் செய்தியை பரப்புவது வருத்தத்துக்குரியது- சேகர் பாபு..!

ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரியவர்களே, காணொளி காட்சிகள் எதையும் திரையிடமாட்டோம் என்று குறிப்பிட்டுதான் அனுமதியே கோரியுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

cm-stalin-slams-annamalai-and-nirmala-seetharaman

இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதியமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி அல்ல என்று பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது என சாடினார். அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பா.ஜ.க.வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களும், பா.ஜ.க.வால் உயர்ந்த பொறுப்பைப் பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஏ என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.