திமுக-பாஜக கூட்டணி சேர்ந்தது; அப்போ நாங்க கூட்டணி சேர்வதில் மட்டும் என்ன தப்பு - இபிஎஸ்

DMK BJP Edappadi K. Palaniswami NEET
By Sumathi Apr 21, 2025 08:28 AM GMT
Report

அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதல்வருக்கு பயம் வந்துவிட்டதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக-பாஜக கூட்டணி

தமிழகசட்டசபை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2010 டிசம்பரில்தால் நீட் தேர்வுக்கான ஆரம்பப் புள்ளி தொடங்கியது.

edappadi palanisamy

திமுக-காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக போராடியது. நீட் தேர்வு பற்றி பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டேன். திருவிழாவில் மோர் உள்ளிட்டவை குடித்த மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது.

துணைவேந்தர் மாநாட்டிற்கு அழைப்பு - திமுகவை வம்பிழுக்கும் ஆளுநர்

துணைவேந்தர் மாநாட்டிற்கு அழைப்பு - திமுகவை வம்பிழுக்கும் ஆளுநர்

இபிஎஸ் கேள்வி

சித்திரை திருவிழாவிற்கு உறையூர் பகுதி மக்கள் மட்டும்தான் சென்றார்களா? உறையூர் பகுதி மக்களுக்கு மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது ஏன்? திமுக-பாஜக கூட்டணி சேர்ந்தபோது நாங்கள் கூட்டணி சேர்வதில் மட்டும் என்ன தவறு?

திமுக-பாஜக கூட்டணி சேர்ந்தது; அப்போ நாங்க கூட்டணி சேர்வதில் மட்டும் என்ன தப்பு - இபிஎஸ் | Cm Stalin Scared For Bjp Admk Alliance Eps

அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதல்-அமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் இப்படி பேசுகிறார். முதலமைச்சர் பதற்றப்படுவதை சட்டசபையில் நேருக்கு நேர் பார்த்தேன்." எனத் தெரிவித்துள்ளார்.