தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார் - கொந்தளித்த அண்ணாமலை!

Dr. S. Ramadoss M K Stalin PMK K. Annamalai
By Vidhya Senthil Nov 24, 2024 07:30 PM GMT
Report

தரக்குறைவான முறையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 முதல்வர் 

சென்னையில் கள ஆய்வில் ஈடுபட்டு இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பல்வேறு கேள்விகளுக்கு விடை அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் அதானி குறித்து பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை குறித்த கேள்வி எழுப்பினர் . அதற்கு அவருக்கு வேறு வேலை இல்லை .

annamalai

அதனால் தினமும் அறிக்கை விடுகிறார்; அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். முதலமைச்சரின் கருத்து கண்டனம் தெரிவித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி,

ராமதாஸ் ஆதரவால்தான் ஸ்டாலின் அமைச்சராக முடிந்தது; மன்னிப்பு கேளுங்கள் - அன்புமணி ஆவேசம்

ராமதாஸ் ஆதரவால்தான் ஸ்டாலின் அமைச்சராக முடிந்தது; மன்னிப்பு கேளுங்கள் - அன்புமணி ஆவேசம்

அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது, அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாமக ராமதாஸ் அவர்கள் கேள்வி

அண்ணாமலை

எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார் போலும்.

mk stalin

ஐயா திரு. ராமதாஸ் அவர்கள் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்? அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ஐயா திரு.ராமதாஸ் அவர்கள்

கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.