பிரதமர் மோடிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்
மத்திய அரசிடம் கையேந்த மாநிலங்கள் என்ன பிச்சைக்காரர்களா என கேள்வி எழுப்பியவர் தானே தற்போதைய பிரதமர் மோடி என தமிழக முதலமைச்சர் முகஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
இன்னு பொன்னேரியில் திருவள்ளுவர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய முக ஸ்டாலின், சமீபத்தில் இங்கே வந்த மோடி, எவ்வளவு கொடுத்தாலும் இங்கே இருப்பவர்கள் அழுகிறார்கள் என கூறினார்.
நாங்கள் கேட்பது அழுகை அல்ல, அடக்கத்துடன் ஒன்றை கூறுகிறேன். மத்திய அரசிடம் கையேந்த மாநிலங்கள் என பிச்சைக்காரர்களா? என கேட்டவர் தானே நீங்கள், அதை நினைவுப்படுத்துகிறேன்.
ஆளுநர் மூலமாக எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறினார், அதைத்தானே இப்போது மத்திய அரசும் செய்து கொண்டிருக்கிறது.
நீங்கள் கேட்டதையே, நாங்களும் கேட்டால் அழுகிறேன் என்பதா? இது தமிழ்நாட்டின் உரிமை, உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம் என்றார்.