தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால்..அதுவும் எங்க CM-க்கு தான் - சேகர்பாபு
தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால் அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்குதான் கிடைக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். அப்போது உரையாற்றிய அமைச்சர் சேகர்பாபு,
“இறை பக்தி என்பது வாழைப்பழம் போன்றது. வாழைப்பழத்தில் இருக்கும் தோல் தான் சனாதனம். அதனுள் இருக்கும் பழம்தான் இறைவன். கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
தெய்வங்களுக்கு வாக்குரிமை
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயில் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகிய நாட்களிலும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும்.
பக்தர்களுக்கு நாள்முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 13 திருக்கோயில்களில் நடைபெற்றுவருகிறது. இவ்வாண்டு முதல் 1.பிள்ளையார்பட்டி, அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில். 2.கொடைக்கானல்,
அருள்மிகு குறிஞ்சியாண்டவர் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும். தெய்வங்களுக்கு வாக்குரிமை இருந்தால் அந்த வாக்கும் எங்கள் முதலமைச்சருக்குதான் கிடைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.