தமிழக அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு
தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் பேச்சுகள், செயல்பாடுகள் இருக்கக்கூடாது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மாலை நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் சூழலில் அமைச்சரவை கூட்டம் நடந்ததாக முக்கியமாக பார்க்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் முக்கிய தொழில் திட்டங்கள், விரிவாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிகிறது.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் துறைரீதியாக பணிணை விரிவுபடுத்துவதற்கான செயல்பாடுகளில் கவனம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
மேலும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்கள், பேச்சுகள் இருக்கக்கூடாது எனவும் கண்டிப்புடன் கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோரின் பேச்சு சர்ச்சையான நிலையில் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.