58 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் - முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு!
விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
விருதுநகர்
முதலமைச்சர் முக ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று விருதுநகர் வந்தார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவகாசி , கன்னிச்சேரி புதூரில் பட்டாசு ஆலையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பட்டாசு ஆலை தொழிலாளர்களிடம் தங்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதன் பிறகு நேற்று மாலையில் விருதுநகரில் வாகன பேரணி (ரோடு ஷோ) நிகழ்ச்சி நடந்தது. இதில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார்.
புதிய கட்டிடம்
தொடர்ந்து விருதுநகரில் 'விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு, விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகம் வருகிறார்.
அங்கு ரூ.77 கோடியில் 6 தளங்களுடன் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பார்வையிடுகிறார். அதன் பின்னர் விருதுநகர் அருகே பட்டம்புதூரில் 58 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.