மருத்துவ சிகிச்சைக்கு இனி ஆம்புலன்ஸ் தேவையில்லை - தமிழக அரசு வெளிட்ட அறிவிப்பு!

M K Stalin Government of Tamil Nadu DMK
By Vidhya Senthil Nov 07, 2024 12:14 PM GMT
Report

தமிழகம் முழுக்க 10 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடியின மக்களுக்கு 25 பைக் ஆம்புலன்ஸ்கள் வாங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

 தமிழக அரசு 

அணுகுவதற்கு கடினமான மற்றும் போக்குவரத்து வசதியற்ற மலை கிராமப் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் மற்றும் இதர மக்களின் அவசர மருத்துவ சேவைகளுக்காக முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 25 இருசக்கர அவசர கால மருத்துவ வாகனங்கள் ரூ.1.60 கோடி செலவில் வாங்குவதற்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

tn govt

இவ்வாகனங்கள் 108 அவசரகால ஊர்திகளுக்கு இணைப்பு வாகனங்களாக (Feeder Ambulance) செயல்பட்டு, நோயாளிகளை மருத்துவமனைக்கு துரிதமாக அழைத்துச் செல்ல வழிவகுக்கும். நவீன முறையில் உரிய மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்ட இரு சக்கர அவசரகால வாகன சேவையானது.

இனி ரொம்பவே ஈஸி; சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. 4 டூ 6 டூ 8 அப்கிரேட் - அசத்தல் திட்டம்!

இனி ரொம்பவே ஈஸி; சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே.. 4 டூ 6 டூ 8 அப்கிரேட் - அசத்தல் திட்டம்!

தற்போதுள்ள 1353 அவசரகால 108 ஊர்தி சேவையினுள் அடங்கும். இந்த இரு சக்கர அவசரகால வாகனங்களின் சேவை கடைநிலை பயனாளர் வரை சென்றடையும். இந்த வாகனமானது உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து பயனாளிகளை மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.

 சிறப்பம்சங்கள் 

 மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மகப்பேறு, பாதுகாப்பான பிரசவ போக்குவரத்து மற்றும் தாய்சேய்நல மருத்துவ பரிசோதனைகளுக்கான சேவை. மருத்துவ மற்றும் எதிர்பாராத அவசரநிலைகளில் உதவுவதற்கு ஏற்றவாறு இவ்வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்

போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் உள்ள பயனாளிகளை உரிய 108 அவசர கால வாகனங்கள் உள்ள இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான இணைப்பு வாகனமாக இவ்வாகனங்கள் செயல்படும். எளிதில் அணுக முடியாத, 10 மாவட்டங்களில் உள்ள மலைக் கிராமங்களை தேர்ந்தெடுத்து,

அங்கு வாழும் பழங்குடியின மக்களுக்கும் மற்றும் இதர மக்களுக்கும் இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் உடனடி சேவை செய்யும். இந்த இருசக்கர அவசரகால வாகனத்தில் ஜிபிஎஸ் (GPS) கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.