முதல்வரின் தாயார் திடீரென மருத்துவமனையில் அட்மிட் - பரபரப்பு!
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயார் திடீரென மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வரின் தாயார்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயாருமான தயாளு அம்மாளுக்கு தற்பொழுது 90 வயதாகிய ஆகிறது. இவர் வயது மூப்பு காரணமான பொதுவெளியில் நிகழ்ச்சிகளை தவிர்த்து சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார்.
அவருக்கு வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர் நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உடல்நல குறைவு
இந்நிலையில், அவருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
மேலும், இவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவரது உடல்நிலை குறித்தும் சிகிச்சை குறித்தும் விசாரித்துள்ளார்.