ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலினின் தொடங்கி வைத்தார்!
தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தைத் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4000 அளிக்கப்படும் என்றும், அதன் முதல் தவணையாக ரூ.2000 அளிக்கப்படும் என்றார். இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ. 2000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
கொரோனா நிதியுதவிக்கான டோக்கன் விநியோகம் வரும் 15 ம் தேதி முதல் ரேஷனில் 2000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. அரசு வழங்கும் கொரோனா சிறப்பு நிவாரண நிதிக்காக முதல் தவணை டோக்கன் நியாய விலைக்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை பதற்றம் : அதிகாலைவேளை அமெரிக்காவிற்கு ஈரான் இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு IBC Tamil
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan