ஜனாதிபதிக்கு அழைப்பு; டெல்லி புறப்பட்ட முதலமைச்சர் - எதற்காக?
குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
டெல்லி பயணம்
சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டு வரும் பன்னோக்கு அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து திறப்பு விழா நடக்கவுள்ளது. முன்னாள் முதலமைச்சர், மறைந்த கருணாநிதியின் நினைவாக, அவர் பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் அழைத்து திறப்பு விழாவை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில், நேற்றிரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல முதலமைச்சர் ஸ்டாலின் ஆயத்தமான நிலையில்,
ஜனாதிபதிக்கு அழைப்பு
இரவு 8.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஏர்-இந்தியா பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனால், அந்த பயணத்தை ஒத்திவைத்த முதலமைச்சர், நேற்றிரவி வீடு திரும்பினார்.
இந்நிலையில், இன்று காலை மணியளவில் டெல்லி புறப்படும் விமானத்தில் புறப்பட்டார்.
தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் சந்திக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.