இந்தியாவின் குடியரசு தலைவருக்கு இவ்வுளவு சலுகைகளா?
இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த ஜூலை 18ஆம் தேதி நடைபெற்றது.
15ஆவது குடியரசுத் தலைவர் தேர்தல்
அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜூலை 21ஆம் தேதி இந்தியாவின் புதிய 15ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் திரௌபதி முர்மு மற்றும் இந்தியத் தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்க் கட்சிகளின் தரப்பில் யஸ்வந்த் சின்ஹா ஆகியோரும் போட்டியிட்டனர்.

இதில் திரௌபதி முர்மு வெற்றி பெற்றால், இந்தியாவின் முதல் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவராவர் என்கிற பெருமையைப் பெறுவார்.
அதே சமயம் குடியரசுத் தலைவர் பதவி பெயர் அளவில்தான் அதிகாரமே தவிர இந்திய அரசியலை முழுவதுமாக வழி நடத்த முடியாது அந்த அதிகாரம் பெரும்பாலும் பிரதமரிடமே இருக்கும்.
அதே சமயம் இந்தியாவின் சிறந்த குடியரசுத்தலைவர்களான கே ஆர் நாராயணன் முதல் ஏபிஜே அப்துகலாம் வரை சிறப்பாக கையாண்டு மக்கள் மனதில் இடம் பிடித்ததும் முக்கியமானது.
ராஷ்டிரபதி பவன்
இந்த நிலையில் நாட்டின் முதல் குடி மகன் என்ற பெயருக்கு சொந்தமான ஜானாதிபதிக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை காண்போம் உலகின் மிகப்பெரிய அரசு மாளிகைகளில் ஒன்றான ராஷ்டிரபதி பவன் இந்திய குடியரசுத் தலைவரின் வீடு மற்றும் அலுவலகமாக செயல்படுகிறது.

சர் எட்வின் லுடியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோர் இந்த பிரம்மாண்ட மாளிகையை வடிவமைத்தனர். சுமார் 330 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் ராஷ்டிரபதி பவன் வளாகத்தில், 2 லட்சம் சதுர அடியில் கட்டமைக்கப்பட்டுள்ளது .
குடியரசுத் தலைவரின் வீடு. 340 சொகுசு அறைகள், மிகப்பெரிய நூலகம் என பல சொகுசு வசதிகளை கொண்டது ராஷ்டிரபதி பவன் .
15 ஏக்கர் நிலப்பரப்பு
இந்தியக் குடியரசுத் தலைவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் மிகப்பெரிய குதிரை லாயம், அற்புதமான உலகத்தரம் வாய்ந்த குதிரைகள், ஒரு ராட்சத கோல்ஃப் கோர்ஸ், முகலாயர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்ட மொகல் தோட்டம் என பட்டியல் நீள்கிறது.

இதில் மொகல் தோட்டம் மட்டும் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடைக்கிறது. இந்தியக் குடியரசுத் தலைவரின் வீடு மற்றும் அலுவலகத்தில் மிகப்பெரிய குதிரை லாயம், அற்புதமான உலகத்தரம் வாய்ந்த குதிரைகள், ஒரு ராட்சத கோல்ஃப் கோர்ஸ், முகலாயர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்ட மொகல் தோட்டம்,இந்த மொகல் தோட்டம் மட்டும் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் பறந்து விரிந்து கிடைக்கிறது.
இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர் மாதம் சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக பல்வேறு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
குடியரசு தலைவரின் சம்பளம்
ஏழாவது பே கமிஷனுக்குப் பிறகு தான் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இத்தனை அதிக சம்பளம் வந்தது என்றும், 2017 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவருக்கு மாதம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது என்றும் கூறப்படுகிறது.
இத்தனை பெரிய பிரம்மாண்ட மாளிகையை, சொல்லப்போனால் இந்திய அரசின் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகத் திகழும் இந்த அலுவலகத்தைப் பராமரிக்க, பாதுகாக்கப் பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவருக்கு உதவ என நூற்றுக்கணக்கான உதவிப் பணியாளர்கள் இருப்பர்.
ராஷ்டிரபதி பவன் எந்த அளவுக்கு வசதியாகவும் பறந்து விரிந்து கிடைக்கிறதோ, அதேபோல இந்தியக் குடியரசுத் தலைவர் விடுமுறை நாட்களைக் கழிக்க இந்தியாவிலேயே இன்னும் இரு பங்களாக்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரத்தில் ராஷ்டிரபதி நிலையம் என்கிற பெயரிலும், இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் ஒரு சொகுசு பங்களாவும் குடியரசுத் தலைவரின் வருகைக்காக எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 w 22 புல்மென் கார்ட் காரும், குடியரசுத் தலைவர் இந்தியாவின் பிரதிநிதியாக மேற்கொள்ளும் பயணங்களுக்கு லிமோஷன் (limousine) காரும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல அம்சங்கள் இந்த கார்களில் பொருத்தப்படுகின்றன. இந்தியக் குடியரசுத் தலைவராக ஒருவர் பொறுப்பேற்று விட்டால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவமனை சிகிச்சைகள் மற்றும் வாடகை இல்லா ஒரு சொகுசு வீடு போன்றவை வழங்கப்படும்.
இந்தியக் குடியரசுத் தலைவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள பிரசிடெநன்ட் பாடிகார்ட் (PBG) என்கிற பெயரில் ஒரு தனி பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. இது உலகின் மிக வலிமையான ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவத்தின் மிகப் பழமையான யூனிட் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு வசதி
பொதுவாக பிபிஜி யூனிட் போர் இல்லாத காலங்களில் பெயருக்குச் செயல்படும் ஒரு யூனிட்டாகவே இருக்கும். போர் மூண்டால் ஒட்டுமொத்த பி பி ஜி யூனிட்டும் களத்தில் இறக்கப்படும்.

ஒருவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றால் அவருக்கு மாதாமாதம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஓய்வூதிய தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு சலுகை
அதோடு வாடகை செலுத்த இல்லா சொகுசு பங்களா, இலவச ரயில் மற்றும் இலவச விமான பயணம் என பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் தற்போது பஜாகவை சேர்ந்த திரௌபதி முர்மு நாட்டின் 15 வது குடியரசுத்தலைவர் மற்றும் நாட்டின் இரண்டாவது பெண்குடியரசுத் தலைவர் என்ற பெயரோடு நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர் என்ற பெயரையும் பெறுவார்.