விக்கிரவண்டி இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர்..யார் இந்த அன்னியூர் சிவா? முதல்வர் பிரச்சாரம்!

M K Stalin DMK Election
By Swetha Jul 05, 2024 07:06 AM GMT
Report

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துள்ளார்.

திமுக வேட்பாளர்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருகின்ற 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பிரச்சாரம் செய்ய 3 நாட்கள் மட்டுமே உள்ளது.

விக்கிரவண்டி இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர்..யார் இந்த அன்னியூர் சிவா? முதல்வர் பிரச்சாரம்! | Cm Stalin Campaign Video For Dmk Candidate

இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் நேரில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறிவுரைப்படி சற்று ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சூழலில், வீடியோ ஒன்றை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. உங்கள் மண்ணின் மைந்தர்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்பாளரை அறிவித்த திமுக

அன்னியூர் சிவா? 

1986ஆம் ஆண்டு முதல் அன்னியூர் சிவாவை நான் பார்த்து கொண்டிருக்கிறேன். தடம் மாறாத நிறம் மாறாத கலைஞரின் உடன்பிறப்புகளில் ஒருவர். தன்னால் கழகத்திற்கு என்ன லாபம் என்று சிந்திக்கக் கூடியவர். கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவருக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரடி பலன் கிடைக்கும் வகையில் நமது அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக அரசு என்றாலே சமூக நீதி அரசு தான். பாஜக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலம் சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.