விஷச்சாராயம்..35 பேர் பலி; குடும்பத்தினருக்கு நிவாரண நிதி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

M K Stalin Tamil nadu Governor of Tamil Nadu Death Kallakurichi
By Swetha Jun 20, 2024 06:12 AM GMT
Report

கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்களின் குடும்பத்துக்கு நிவாரணன் வழங்கப்படுகிறது.

விஷச்சாராயம்

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் சாராயம் விற்பனை நடந்துள்ளது. அதனை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனே, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

விஷச்சாராயம்..35 பேர் பலி; குடும்பத்தினருக்கு நிவாரண நிதி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! | Cm Stalin Announced Relief Illegal Liqour Death

தற்போது வரை விஷசாராயம் குடித்து பலியானவர்கள் என்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் தமிழ்ச்செல்வன், மதுவிலக்கு பிரிவைச் சேர்ந்த கவிதா, பாண்டி, செல்வி,பாரதி, ஆனந்தன், சிவச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், மனோஜ் உள்ளிட்டோரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

விஷச்சாராயம் - 35 பலி; சட்டவிரோத மதுபானங்களை தடுப்பதில் குறைபாடு..ஆளுநர் ரவி ஆவேசம்!

விஷச்சாராயம் - 35 பலி; சட்டவிரோத மதுபானங்களை தடுப்பதில் குறைபாடு..ஆளுநர் ரவி ஆவேசம்!

நிவாரண நிதி

இந்நிலையில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, மரணம் அடைந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு தலா ரூ.10 லட்சமும்,

விஷச்சாராயம்..35 பேர் பலி; குடும்பத்தினருக்கு நிவாரண நிதி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! | Cm Stalin Announced Relief Illegal Liqour Death

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ரூ.50,000-மும் நிவாரணம் வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். மேலும், மெத்தனால் கலந்து கள்ள சாராயம் காய்ச்சியர்வகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும்,

மெத்தனால் இருப்பை முழுமையாக கண்டறிந்து அவற்றை கைப்பற்றி அனைத்தையும் அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான ஆய்வுக்கு ஒரு விசாரணை ஆணையம் அமைப்பு ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்நாதன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.