இனி காம்தார் நகரில்லை..எஸ்.பி பாலசுப்ரமணியம் சாலை ;அறித்த ஸ்டாலின் - நெகிழ்ந்த சரண்!

S P Balasubrahmanyam M K Stalin Tamil nadu Chennai
By Swetha Sep 26, 2024 05:44 AM GMT
Report

நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி பாலசுப்ரமணியம்

எஸ்.பி.பி நகர் இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை பாடி ஒட்டுமொத்த தேசத்தின் நெஞ்சங்களிலும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இனி காம்தார் நகரில்லை..எஸ்.பி பாலசுப்ரமணியம் சாலை ;அறித்த ஸ்டாலின் - நெகிழ்ந்த சரண்! | Cm Stalin Announced Kamdar Nagar As Spb Road

பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக கொடி கட்டி பறந்தவர். 40 ஆயிரம் பாடல்கள், ஆறு தேசிய விருதுகள், ஒரே நாளில் 21 பாடல்கள் என எவரும் செய்திட முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டியவர்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன் என இந்திய அரசின் மிக உயரிய விருதுகளையும் பெற்ற எஸ்.பி.பி, கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி மறைந்தார்.

முன்னதாக எஸ்.பி.பி நீண்ட காலம் வசித்த காம்தார் நகர் பகுதியை "எஸ் பி பாலசுப்ரமணியம்" நகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று, அவரது மகன் எஸ்.பி.பி.சரண் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அவர் வாழ்ந்த இடம்..எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நகர் என மாற்றுக - மகன் கோரிக்கை!

அவர் வாழ்ந்த இடம்..எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நகர் என மாற்றுக - மகன் கோரிக்கை!

நெகிழ்ந்த சரண்

பாடகர் எஸ்.பி.பி மறைந்து 4 ஆண்டுகள் ஆனாலும் அவருடைய அமுதக்குரலால் பாடப்பட்ட பாடல்கள் காற்றை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில்,

சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம், காம்தார் நகர் முதல் தெருவிற்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலினுக்கு எஸ்.பி.பி சரண் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், " தன் குடும்பத்தின் சார்பில் அரசுக்கு வைத்த கோரிக்கையை இரண்டு நாட்களில் நிறைவேற்றி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

கோரிக்கையை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் மற்றும் சாமிநாதன் ஆகியோருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.