ராகுல் ஏன் சிஏஏ பற்றி எதுவும் பேசவில்லை? பினராயி விஜயன் கேள்வி
யாத்திரை செல்லும் ராகுல், ஏன் சிஏஏ பற்றி எதுவும் பேசவில்லை என பினராயி விஜயன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பினராயி விஜயன்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள கவர்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன்,
குடியுரிமை பிரச்னைகளில் காங்கிரஸின் மெளனம் குற்றகரமானது. சிஏஏ-க்கு எதிராக காங்கிரஸின் தேசிய நிலைப்பாடு என்ன? நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு இது தெரியாதா? இதுபற்றி அவர் ஒரு வார்த்தைகூட பேசவில்லையே. காங்கிரஸ் பொதுச் செயலாளரான கே.சி.வேணுகோபால், ஏன் அவசரம் என்று மட்டும் கேட்டார்.
காங்கிரஸ் நிலைப்பாடு
நாங்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன் மண்டியிட்டு மெளனமாக இருக்கமாட்டோம். குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக கேரளாவில் போராடியவர்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய தீர்மானித்திருக்கிறோம். நாங்கள் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முன் மண்டியிட்டு மெளனமாக இருக்கமாட்டோம்.
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக கேரளாவில் போராடியவர்களுக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய தீர்மானித்திருக்கிறோம். குறிப்பிட்ட மதங்களை சார்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களை இரண்டாம் தர குடிமக்களாக கணக்கிடுகின்றனர்.
குடியேற்றக்காரர்களை முஸ்லிம் என்றும், முஸ்லிம் அல்லாதவர்கள் என்றும் எப்படி பிரித்துபார்க்க முடியும். அரசியலமைப்பு சட்டத்துக்குப் பதில் மனுஸ்மிருதியை ஸ்தாபிக்கும் சங்க பரிவாரின் மூளையிலிருந்து தான் இந்த விஷச் சட்டம் பிறந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.