தேவர் குருபூஜை - பசும்பொன் செல்லும் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் தேவர் குருபூஜையில் பங்கேற்க பசும்பொன் செல்கிறார்.
தேவர் குருபூஜை
ராமநாதபுரம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கி 30ஆம்தேதி வரை அரசு விழாவாக அவரது நினைவிடத்தில் கொண்டாடப்படுகிறது.
இதில், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவார்கள்.
ஸ்டாலின் பங்கேற்பு
இந்நிலையில், இதில் கலந்துக்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சென்னையிலிருந்து 29ஆம் தேதி விமானம் மூலம் மதுரை செல்லும் முதல்வர் அங்கு ஓய்வு எடுக்கிறார்.
பின் சாலை மார்க்கமாக 30ஆம் தேதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். மேலும், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பசும்பொன் சென்று அஞ்சலி செலுத்தப் போவதாக தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.