வசனகர்த்தா ஆரூர்தாஸ் மறைவு - முதலமைச்சர் அஞ்சலி!
திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
ஆரூர்தாஸ் மறைவு
திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமானார் ஆரூர் தாஸ்(91). பாசமலர் படத்திற்கு வசனம் எழுதி அதன் மூலம் பிரபலமானார். எம்ஜிஆ,ர் சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல ஏராளமானோர் படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார்.
300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். இவர் கதை, வசனம், திரைக்கதை அமைப்பில் நிறைய படங்கள் வெளிவந்துள்ளன. விதி படத்தின் வசனம் மிகவும் பிரபலம் பெற்று இருந்தது. ஒரு காலத்தில் டப்பிங் படங்களுக்கு பெரும்பாலும் வசனம் எழுதியிருந்தார் ஆரூர் தாஸ்.
முதலமைச்சர் அஞ்சலி
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திரைத்துறையில் இவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.