மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதை கண்காணிக்கும் கூட்டம் - முதலமைச்சர் ஆலோசனை
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கும் குழுவின் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
கண்காணிப்புக்குழு
மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடை முறைப்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கு மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முதலமைச்சர் ஸ்டாலினை தலைவராக கொண்டு மாநில அளவில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இதை அடுத்து இந்த குழுவின் முதல் கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.
ஆலோசனை
இதில், மத்திய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட அளவில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்களில் எடுக்கப்பட்டிருக்கும் முடிவுகளை பொறுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையினை மதிப்பாய்வு செய்தல், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில்
மாநில அரசால் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மனித வளங்களின் செயல் திறனை வரிசைப்படுத்தி மதிப்பாறைவு செய்த வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இருக்கும் தடைகளை நீக்கி விரைந்து சட்டங்களை செயல்படுத்துவது
அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் வடிவமைப்புகளை மேம்படுத்துவது அல்ல நடுநிலைப் படுத்துவதற்கு உரிய திருத்தங்களை செய்யவும் பரிந்துரைகள் வழங்குவது பற்றியும் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.