'வானத்தில் ஆச்சரியம்' - டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்சுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tennis Novak Djokovic Tamil nadu DMK
By Jiyath Jan 29, 2024 09:15 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்சுடன் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது

மு.க.ஸ்டாலின் 

தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் துபாய் வழியாக ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்த மு.க.ஸ்டாலின், டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்சுடன் உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

தூக்கத்துல எழுப்பி கேட்டாலும்...பாஜக கூட கூட்டணி இல்லை தான் கூறுவோம் - ஜெயக்குமார் உறுதி..!

தூக்கத்துல எழுப்பி கேட்டாலும்...பாஜக கூட கூட்டணி இல்லை தான் கூறுவோம் - ஜெயக்குமார் உறுதி..!

வானத்தில் ஆச்சரியம்

இதுதொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "வானத்தில் ஆச்சரியம். ஸ்பெயின் செல்லும் விமானத்தில் டென்னிஸ் ஜாம்பவான் ஜோக்கோவிச்சை சந்தித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயினில் 8 நாள் பயணத்தை முடித்துவிட்டு,  அடுத்த மாதம் 7-ம் தேதி காலை சென்னை திரும்பவுள்ளார்.