77வது சுதந்திர தினம்: இன்று 3-வது முறை தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் மூவர்ண கொடியை ஏற்றினார்.
சுதந்திர தினம்
இந்தியா முழுவதும் 77-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்த உள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரங்களிலும் சுதந்த தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
முதல்வர் வருகை
இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி கம்பம் தமிழக பொதுப்பணித்துறையால் ரூ.45 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தலைமை செயலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சுதந்திர தினத்தில் 3 வது முறையாக கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.