இது ப்ரமோஷன் உங்களுக்கு.. அமைச்சரை சமாதானப்படுத்திய முதலமைச்சர்!
அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இலாகா மாற்றம்
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதலமைச்சர் தலைமையில் இருமுறை மட்டுமே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து தற்போது மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவுக்கு, பிடிஆர் பழனிவேல் ராஜன் வகித்து வரும் நிதித்துறை வழங்கப்பட்டுள்ளது.
வாழ்த்து
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டு மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. இந்த இலாக்கா மாற்றத்தையடுத்து, அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ‘பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற போது, இது Promotion, IT துறையை சிறப்பாக நடத்தியது போல் பால் வள துறையயும், சிறப்பாக நடத்தவேண்டும் என கூறிய தலைவரின் அன்பு வார்த்தைகள் உற்சாகத்தை தந்தது,தலைவரின் ஆணைக்கிணங்க செயல்படுவேன்’ என பதிவிட்டுள்ளார்.