விடுதலைக்கு மறுப்பு; சிறப்பு சலுகையெல்லாம் கிடையாது - உச்சநீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்!
கெஜ்ரிவாலுக்கு சிறப்பு சலுகை வழங்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால்
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேல்முறையீட்டு மனு
இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறுவதை ஏற்க முடியாது. நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர்கள் எனக் கூறி கெஜ்ரிவால் தரப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.