பாஜகவில் சேர சொல்லி அழுத்தம் தறாங்க.. அடிபணிய மாட்டேன் - கெஜ்ரிவால் காட்டம்!

BJP Delhi Arvind Kejriwal
By Sumathi Feb 06, 2024 05:43 AM GMT
Report

பாஜகவில் சேரச் சொல்லி தனக்கு அழுத்தம் தருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் 

டெல்லி மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை நடத்தி வருகிறது.

பாஜகவில் சேர சொல்லி அழுத்தம் தறாங்க.. அடிபணிய மாட்டேன் - கெஜ்ரிவால் காட்டம்! | Cm Arvind Kejriwal About Bjp Pressure Joining

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியான் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

பாஜக அழுத்தம்

ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார். தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

arvind kejriwal

அதில் பேசியதில், ''ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளின் மூலம் தனக்கு பாஜக அழுத்தம் தருகிறது. பாஜகவில் சேரும்படி நிர்பந்திகின்றனர். பாஜகவில் நான் ஒருபோதும் சேரப் போவதில்லை. ஒன்றிய பாஜக அரசு எங்களுக்கு எதிராக சதி செய்ய முயன்றாலும் நான் அடிபணிய மாட்டேன்.

"நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக கண்டுபிடித்தல் என்னை தூக்கிலிடுங்கள்" - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்!

"நான் ஒரு பைசா ஊழல் செய்ததாக கண்டுபிடித்தல் என்னை தூக்கிலிடுங்கள்" - பிரதமருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்!

ஒன்றிய அரசின் அனைத்து விசாரணை அமைப்புகளும் இன்று வரை எங்களை பின் தொடர்ந்து வருகின்றன. ஆம் ஆத்மியின் ஏழு எம்.எல்.ஏக்களிடம் பாஜக 25 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளனர். பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட்டில் நான்கு சதவீதம் மட்டுமே செலவு செய்கிறது.

ஆனால் டெல்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் இருந்து 40 சதவீதம் செலவு செய்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.