45 கிலோ சந்தனக்கட்டைகள் அரசாணையை நாகூர் திருவிழாவிற்கு வழங்கிய முதலமைச்சர் விஜய்

Chief Minister of Tamil Nadu
By Sakthi Raj Oct 22, 2026 12:42 PM GMT
Report

 நாகூரில் நவம்பர் பத்தாம் தேதி முதல் நடைபெற இருக்கக்கூடிய சந்தனக்கூடு திருவிழாவிற்கு சுமார் 45 கிலோ சந்தனக்கட்டைகளை விலை இல்லாமல் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் வழங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதாவது சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களை சந்தித்து சந்தன கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை பெற்ற பின்பு அமைச்சர்கள் ஷாஜகான், ஆர்.வீ.ரஞ்சித் குமார், பர்வேஷ் ஆகியோருடன் நாகூர் தர்கா அறங்காவலர்களும் இணைந்து நிருபர்களை சந்தித்தனர்.

45 கிலோ சந்தனக்கட்டைகள் அரசாணையை நாகூர் திருவிழாவிற்கு வழங்கிய முதலமைச்சர் விஜய் | Cm Approves 45 Kg Sandalwood For Nagore Festival

அதில் மொத்தமாக உள்ள 11 அறங்காவலர்களின் 8 அறங்காவலர்கள் முதலமைச்சரை சந்தித்து அந்த அரசாணை பெற்றிருப்பதாகவும் நடக்க இருக்கக்கூடிய விழாவினை சிறப்பாக நடத்துவதற்கான ஆய்வு கூட்டத்தை நாளை நடத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அதோடு சந்தன கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை கட்சி நிர்வாகிகளின் வழியாக வழங்கப்படுவதாக எழுந்திருக்கக் கூடிய குற்றச்சாட்டுகளுக்கு தொடர்பான கேள்விகளை எழுப்பியதற்கு சந்தனக்கூடு திருவிழாவில் அரசியல் தொடர்பாக எந்த தலையீடும் இல்லை எனவும் தவறான செய்தி வெளியாக இருப்பதாகவும் கூறிய அமைச்சர் ஷாஜகான், நாகூர் தர்காவில் யானை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை விரைவில் எடுப்பதாகவும் முதலமைச்சராக உறுதி அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.