முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை.. முதலமைச்சர் சொன்ன வார்த்தை- கதறிய குடும்பம்!

M K Stalin M Karunanidhi DMK
By Vidhya Senthil Oct 22, 2024 02:34 AM GMT
Report

 முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு திராவிட இயக்க படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் திமுக முப்பெரும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 முரசொலி செல்வம்

கடந்த அக்.10-ம் தேதி ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியரும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான செல்வம் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

mk stalin

இந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, முரசொலி செல்வத்தின் படத்தைத் திறந்து வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, ஏற்கவும் முடியவில்லை என்று  கூறினார்.

கூவத்தூர் கூத்து.. பல சீனியர்களைத் தாண்டி முதல்வரானது தெறியும் - உதயநிதி விமர்சனம்!

கூவத்தூர் கூத்து.. பல சீனியர்களைத் தாண்டி முதல்வரானது தெறியும் - உதயநிதி விமர்சனம்!

தொடர்ந்து பேசியவர் செல்வத்துக்கு இரண்டாம் தாயாக இருந்து வளர்த்தவர் கருணாநிதி. பள்ளியில் படித்தபோதும், கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பைத் தொடங்கியபோதும் எனக்குத் துணையாக இருந்தவர் முரசொலி செல்வம்.

 அறக்கட்டளை

மாநாடு, பொதுக்கூட்டம், கழக நிகழ்ச்சிகள் என்றால், முதல் நாளே என்னை அழைத்து எப்படிப் பேச வேண்டும் எனப் பயிற்சி அளித்தவர். முரசொலியில் வந்த 100 கட்டுரைகளைத் தொகுத்து ஒரு புத்தகத்தைச் செல்வம் எழுதியிருக்கிறார். அதில் எங்களைப் பற்றியும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

murasoli selvam

இதைப் பொக்கிஷமாக என் மனதில் பதிய வைத்துக் கொள்வேன். முரசொலி செல்வம் பெயரில் விரைவில் ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் பரிசுகள் வழங்குவது, அந்த பரிசை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.

திமுக முப்பெரும் விழாவில் வழங்குவது என்று முடிவு செய்திருக்கிறோம். அதேபோல், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கோரிக்கையும் நிறைவேற்றப்படும். இ்வ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.