கூவத்தூர் கூத்து.. பல சீனியர்களைத் தாண்டி முதல்வரானது தெறியும் - உதயநிதி விமர்சனம்!

Udhayanidhi Stalin Tamil nadu Chennai Edappadi K. Palaniswami
By Swetha Oct 21, 2024 09:30 PM GMT
Report

 எடப்பாடி எப்படி முதலமைச்சர் ஆனார் என தெறியும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி 

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி,திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது குறித்து விமர்சித்து இருந்தார்.

கூவத்தூர் கூத்து.. பல சீனியர்களைத் தாண்டி முதல்வரானது தெறியும் - உதயநிதி விமர்சனம்! | Udhayanidhi Slams Eps Over Deputy Cm Criticism

இதுகுறித்து பேசிய அவர், என்னை விமர்சிக்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சுதந்திரம் உள்ளது. நான் பொறுப்பெடுக்கும்போதே சொல்லி இருக்கிறேன் விமர்சனங்களை வரவேற்கின்றேன் என்று.

2016 ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அடுத்த முதலமைச்சர் யார் என்று கேள்வி எழுந்த போது பல மூத்தவர்கள் அதிமுகவில் இருந்தார்கள். குறிப்பாக செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன் இவர்களை விட மூத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் இருந்தார்கள்.

இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி எப்படி முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வந்தார் என்ற கதை எல்லாம் தொலைக்காட்சியில் மக்கள் பார்த்தார்கள்.கூவத்தூரில் அவர்கள் அடித்த கூத்து தெரியும். எல்லாவற்றையும் தாண்டி எப்படி முதலமைச்சரானர் என்பதும் எல்லாரும் பார்த்தார்கள்.

உதயநிதி எனக்கு துணையாக இல்லை; மக்களுக்குதான் - ஸ்டாலின் வாழ்த்து

உதயநிதி எனக்கு துணையாக இல்லை; மக்களுக்குதான் - ஸ்டாலின் வாழ்த்து

 கூவத்தூர்.. 

எனவே மற்றவர்களை விமர்சிப்பதற்கு முன்பாக அவர் யோசித்து பார்த்து பேச வேண்டும். திமுக தலைவர் எனக்கு கொடுத்தது பதவி இல்லை. இது ஒரு கூடுதல் பொறுப்பாக தான் நான் பார்க்கிறேன். ஆனால் அதிமுகவில் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக ஆட்சியை பங்கு போட்டார்கள்.

கூவத்தூர் கூத்து.. பல சீனியர்களைத் தாண்டி முதல்வரானது தெறியும் - உதயநிதி விமர்சனம்! | Udhayanidhi Slams Eps Over Deputy Cm Criticism

ஆட்சியை இழந்தவுடன் அவர்கள் பிரிந்து கட்சியை நான்காம் பிரித்தார்கள். இது போன்ற நிலை திமுகவுக்கு என்றும் வராது. முதலமைச்சர் தான் முதன்மையானவர் அவன் தான் எங்களுக்கு தலைவர். கடந்த வாரம் சென்னையில் மழை பாதிப்பும் எற்படும் என்ற எச்சரிக்கை வந்த உடன் முதல்வர்,

துணை முதல்வர் என அனைவரும் களத்தில் மக்கள் பணிகளை மேற்கொண்டோம். அனால் எடப்பாடி பழனிச்சாமி அன்றைய தினம் வீட்டிலிருந்து வெளியே கிளம்பி மக்களுக்கு நலத்திட்ட பணிகளை வழங்க தான் செல்கிறார் என்று எதிர்பார்த்தோம்.

ஆனால் அவர் சேலத்துக்கு சென்று விட்டார்.மக்கள் பாதிக்கப்படும் நேரத்தில் யார் மக்களுக்கு உதவுகிறார்களோ அவர்களுக்கு தான் மக்கள் மனதில் இடம் பெறுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.