சாலை விபத்தில் கர்ப்பிணி உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!
சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
கர்ப்பிணி உயிரிழப்பு
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில், "சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், நெஞ்சத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிவேதா, கபெ குமரேசன் என்பவரை அவரது பிரசவத்திற்காக உறவினர்களுடன் நெஞ்சத்தூர் கிராமத்திலிருந்து
108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லும் போது ஊத்திகுளம் அருகே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக கர்ப்பிணிப் பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி, கணவர் கிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்.
நிதியுதவி
மேலும், இதே விபத்தில் காயமடைந்த அவ்வாகனத்தில் இருந்த 3 நபர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,
ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.