Viral: எறும்பா இல்ல ஏலியனா! மிரள வைத்த புகைப்படத்தின் பின்னணி இதோ..
சாதாரண கட்டெறும்பின் க்ளோஸ் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது.
எறும்பின் புகைப்படம்
லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த யூஜெனின்ஜஸ் கவாலியாஸ்கஸ் என்ற புகைப்பட கலைஞர்தான் இந்த எறும்பின் புகைப்படத்தின் எடுத்துள்ளார். பிரபல கேமரா தயாரிப்பு நிறுவனமான `Nikkon', 1975ம் ஆண்டு முதல் `The Nikon Small World Competition' என்ற புகைப்படப் போட்டியை நடத்தி வருகிறது.
இதில் புகைப்படக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு `light microscope' போன்ற கேமரா லென்ஸ்களைப் பயன்படுத்தி நுண் உயிர்களை அல்லது மிகச்சிறிய நுண் பொருட்களைப் புதுமையான முறையில் புகைப்படம் எடுத்து போட்டிக்கு அனுப்புகின்றனர்.
நிக்கான் பரிசு
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த புகைப்படம் மற்றும் சிறந்த புகைப்பட கலைஞர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டி வருகிறது நிக்கான் நிறுவனம். இந்நிலையில் இந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டிற்கான `The Nikon Small World Competition 2022' போட்டி நடைபெற்றது.
இதில் ஆச்சரியமளிக்கும் வகையில் பல புகைப்படங்கள் போட்டியில் பங்கேற்றன. அதில் `Image of Distinction' என்ற தலைப்பில் ஐரோப்பிய ஒன்றியம் லிதுவேனியாவைச் சேர்ந்த யூஜெனிஜஸ் கவாலியாஸ்காஸ் (Eugenijus Kavaliauskas) என்ற
புகைப்படக் கலைஞர் `5X -Objective Lens Magnification' என்ற லென்ஸ் மூலம் எடுத்த சாதாரண கட்டெறும்பின் க்ளோஸ்அப் புகைப்படம் தான் இது. இப்புகைப்படம் $35 நிக்கான் பரிசை வென்றது.