அன்று பலூன் விற்ற பெண் இன்று மாடல் அழகி : ஒரு ஃபோட்டோவால் மாறிய வாழ்க்கை
சமூக வலைத்தளங்களின் தாக்கம் என்பது தற்போது மிகப் பெரிய அளவில் உள்ளது. இதன் மூலம்.சாதாரண மக்களின் திறமைகள் கூட, ஒரே இரவில் அதிகம் வைரலாகி, அவர்களை பிரபலம் அடைய செய்கிறது.
சமீபத்தில் கூட, கேரளாவைச் சேர்ந்த வயதான கூலித் தொழிலாளி ஒருவரை மொத்தமாக மாற்றி, கோட் சூட்டுடன் எடுத்த போட்டோஷூட்களுக்கு சமூகவலைத்தளங்களில் லைக்குகளை அள்ளியது .
இந்த நிலையில் தற்போது இளம்பெண் ஒருவரின் 'Transformation', பயங்கரமாக ஹிட்டடித்து வருகிறது. ஆம் , கேரளாவில் அதிகம் ஆட்கள் கூடும் இடங்களில் இளம்பெண் ஒருவர் பலூன் விற்று வந்துள்ளார்.
இவரின் புகைப்படத்தினை அர்ஜுன் கிருஷ்ணன் என்ற புகைப்பட கலைஞர், ஒரு திருவிழாவின் போது, கேரளாவில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், இந்த புகைப்படத்தினை அந்த இளம்பெண் மற்றும் அவரது தயாரிடமும் அர்ஜுன் காட்டியுள்ளார்.
இதனைக் கண்ட இருவரும் அதிகம் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிஸ்பு என்ற அந்த பெண், ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கேரளாவில் பலூன் வியாபாரியாக இருந்து வருகிறார்.
இவரின் புகைப்படத்தை, அர்ஜுன் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்ததும், இதற்கான வரவேற்பு, அமோகமாக இருந்தது. அவரது நண்பர் ஷ்ரேயாஸ் என்பவரும், கிஸ்புவை புகைப்படம் எடுத்துள்ளார்.