செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய தனிநபர் நியமித்தால் கடும் நடவடிக்கை - உரிமையாளரே பொறுப்பு!
கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய தனிநபரை நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
கழிவுநீர் தொட்டி
கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்பு குறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கைகளால் மலம் அள்ளும் பணித்தடை மற்றும் மறுவாழ்வளித்தல் சட்டம் -2013, படி தங்கள் வீடுகளிலுள்ள செப்டிக் டேங்க் மற்றும்
கழிவுநீர் பாதையினுள் இறங்கி (Sewer line) சுத்தம் செய்ய எந்தவொரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டணைக்குரிய குற்றமாகும். ஒருவேளை தனி நபரை நியமித்து சுத்தம் செய்யும்போது மரணம் ஏற்பட்டால் வீட்டு உரிமையாளர்களே பொறுப்பாவார்கள் என்றும்,
இழப்பீடு
அவ்வாறு இறக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிமையாளர்கள் ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் கழிவுநீர் பாதை மற்றும் செப்டிக் தொட்டிகள் இயந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும்.
மேலும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய தனிநபர் நியமிக்கப்படுவதை மக்கள் அறிந்தால் 14420 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.